அழியா வளத்தார் திருஒற்றி ஐயர் பவனி தனைக்காண இழியா மகிழ்வி னொடும்வந்தால் என்னே பெண்ணே எழில்கவர்ந்து பழியா எழிலின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் ஒழியா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே
அழியா நிலையாதது மேவிநின் அன்பினோடும் ஒழியா துனைப்பாடி நின்றாடி உலகினூடே வழியாம் உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல்வேண்டும் இழியா தருள்வாய் பொதுமேவிய எந்தைநீயே