அழியாப் பொருளே என்உயிரே அயில்செங் கரங்கொள் ஐயாவே கழியாப் புகழ்சேர் தணிகைஅமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை ஒழியா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால் பழியா இன்பம் அதுபதியும் பனிமை ஒன்றும் பதியாதே