அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன் அணங்க னார்மயல் ஆழத்தில் விழுந்தேன் பழுக்கும் முடருள் சேர்ந்திடுங் கொடியேன் பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன் மழுக்கை ஏந்திய மாசிலா மணிக்குள் மன்னி ஓங்கிய வளர்ஒளிப் பிழம்பே வழுக்கி லார்புகழ் தணிகைஎன் அரசே வள்ள லேஎன்னை வாழ்விக்கும் பொருளே திருச்சிற்றம்பலம் ஆற்றாப் புலம்பல் கொச்சகக் கவிப்பா திருச்சிற்றம்பலம்