அழுத பிள்ளைக்கே பால்உண வளிப்பாள் அன்னை என்பர்கள் அழவலி இல்லாக் கொழுது நேர்சிறு குழவிக்கும் கொடுப்பாள் குற்றம் அன்றது மற்றவள் செயலே தொழுது நின்னடி துதிக்கின்றோர்க் கெனவே துட்ட னேனுக்கும் சூழ்ந்தருள் செயலாம் செழுது மாதவி மலர்திசை மணக்கத் திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே