அழுது நெஞ்சயர்ந் துமைநினைக் கின்றேன் ஐய நீர்அறி யாததும் அன்றே கழுது துன்றிய காட்டகத் தாடும் கதியி லீர்எனக் கழறினன் அல்லால் பழுது பேசின தொன்றிலை ஒற்றிப் பதியில் வாழ்படம் பக்கநா யகரே பொழுது போகின்ற தென்செய்கேன் எனைநீர் பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ