அவமே கழிந்தின்ப மன்பர்கொள வாடுகின்றாய் சிவமே நினது திருவடிதான் நோவாதா
அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளார் அமுதம் மிகப்புகட்டிச் சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன் நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே