அவம்நாள் கழிக்க அறிவேன் அலாதுன் அடிபேணி நிற்க அறியேன் தவம்நாடும் அன்ப ரோடுசேர வந்து தணிகா சலத்தை அடையேன் எவன்நான் எனக்கும் அவண்நீ இருக்கும் இடம்ஈயில் உன்றன் அடியார் இவன்ஆர் அவன்றன் இயல்பென்ன என்னில் எவன்என் றுரைப்பை எனையே