அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும் அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச் செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும் தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன் இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில் இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன் மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே