ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும் பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர் மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும் யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்