ஆக்கம் இல்லார் வறுமையிலார் அருவம் இல்லார் உருவமிலார் தூக்கம் இல்லார் சுகம்இல்லார் துன்பம் இல்லார் தோன்றுமல வீக்கம் இல்லார் குடும்பமது விருத்தி யாக வேண்டுமெனும் ஏக்கம் இல்லார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே
ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன் ஆண்டவ ரேஇங்கு வாரீர் தாண்டவ ரேஇங்கு வாரீர் வாரீர்