ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும் ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில் பாங்காக ஏற்றி() எந்தப் பதத்தலைவ ராலும் படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச் சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே () ஏத்தி - முதற்பதிப்பு, பொ சு; பி இரா, ச மு க