ஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப் பேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர் ஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக் கூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே