ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன் ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான் எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான் தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத் திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே