ஆடஎடுத் தான்என் றறைகின்றீர் என்தலைமேல் சூடஎடுத் தான்என்று சொல்கின்றேன் - நாடறிய இவ்வழக்கை யார்பால் இசைத்தறுத்துக் கொள்கிற்பாம் கவ்வைஅற்ற அம்பலத்தான் கால்