ஆடக மணிப்பொற் குன்றமே என்னை ஆண்டுகொண் டருளிய பொருளே வீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின் மெய்யொளிக் குள்ளொளி வியப்பே வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம் தவிர்த்தருள் வழங்கிய மன்றில் நாடகக் கருணை நாதனே உன்னை நம்பினேன் கைவிடேல் எனையே
ஆடக நீடொளியே நேடக நாடளியே ஆதி புராதனனே வேதி பராபரனே நாடக நாயகனே நானவ னானவனே ஞான சபாபதியே ஞான சபாபதியே