ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே
ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன் கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடுவிருந்து குலாவு கின்றேன் பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை அன்பினொடும் பாடிப் பாடி நீடுகின்றேன் இன்பக்கூத் தாடுகின்றேன் எண்ணமெலாம் நிரம்பி னேனே