ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால் அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன் வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன் நாயி னேன்பிழை பொறுத்திது தருணம் தாட்ட லந்தரு வாய்வடல் அரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே நயந்திது - படிவேறுபாடு ஆ பா