ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும் இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே