ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர் நாயக ரேஉமை நான்விட மாட்டேன் கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம் ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே