ஆண்ட துண்டுநீ என்றனை அடியேன் ஆக்கை ஒன்றுமே அசைமடற் பனைபோல் நீண்ட துண்டுமற் றுன்னடிக் கன்பே நீண்ட தில்லைவல் நெறிசெலும் ஒழுக்கம் பூண்ட துண்டுநின் புனிதநல் ஒழுக்கே பூண்ட தில்லைஎன் புன்மையை நோக்கி ஈண்ட வந்தரு ளாய்எனில் அந்தோ என்செய் கேன்நர கிடைஇடும் போதே