ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற் றணுத்துணைத் திவலையே எனினும் ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன் இல்லையேல் என்செய்கேன் எளியேன் நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள் நினைப்பரும் நிலைமையை அன்பர் வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும் விமலனே விடைப்பெரு மானே