ஆண்டவ னேதிரு அம்பலத் தேஅரு ளால்இயற்றும் தாண்டவ னேஎனைத் தந்தவ னேமுற்றுந் தந்தவனே நீண்டவ னேஉயிர்க் கெல்லாம் பொதுவினில் நின்றவனே வேண்ட அனேக வரங்கொடுத் தாட்கொண்ட மேலவனே