ஆண்டவநின் அருளருமை அறியாதே திரிந்தேன் அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து வேண்டிஎனை அருகழைத்துத் திரும்பவும்என் கரத்தே மிகஅளித்த அருள்வண்ணம் வினையுடையேன் மனமும் காண்தகைய கண்களும்விட் டகலாதே இன்னும் காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன் ஈண்டுருகாக் கரடும்இதற் குருகல்அரி தலவே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே