ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில் அருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து நீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின் நிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி வீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து விதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய் தாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத் தடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே