ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய் ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும் மாண்பனைமிக் குவந்தளித்த மாகருணை மலையே வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த வாழ்வே நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும் விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே