Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1100
ஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய் 
சோதி யேதிருத் தோணிபு ரத்தனே 
ஓதி யேதரும் ஒற்றிஅப் பாஇது 
நீதி யேஎனை நீமரு வாததே
பாடல் எண் :4525
ஆதி அனாதி மருந்து - திரு 

அம்பலத் தேநட மாடு மருந்து 
ஸோதி மயமா மருந்து - என்னைச் 

சோதியா தாண்ட துரிய மருந்து  ஞான
பாடல் எண் :5370
ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே 
நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே 
ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான் 
சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே    
 கட்டளைக் கலித்துறை
பாடல் எண் :5546
ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும் 
சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர் 
நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும் 
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.