ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய் உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச் சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன்() சத்தியத்தெள் ளமுதே () உணர்கின்றேன் - ச மு க பதிப்பு