ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச் சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித் துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய் உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே