ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் வடைவெலாம் இன்றிஒன் றான சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே தூயபே ரருள்தனிச் செங்கோல் நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ