Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :529
ஆனந்த மான அமுதனடி - பர
மானந்த நாட்டுக் கரசனடி
தானந்த மில்லாச் சதுரனடி - சிவ
சண்முகன் நங்குரு சாமியடி
பாடல் எண் :3049
ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்

ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்

மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்

ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்

நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே
பாடல் எண் :3382
ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே

அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
கானந்த மதத்தாலே காரமறை படுமோ

கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ

உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ

நல்லதிரு உளம்எதுவோ வல்லதறிந் திலனே
பாடல் எண் :4908
ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது 
அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது 
ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது 
என்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது அற்புதம்
பாடல் எண் :5084
ஆனந்த நாடகம் கண்டோ மே - பர 
மானந்த போனகம் கொண்டோ மே
பாடல் எண் :5283
ஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே 

அருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே 
தானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே 

தத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.