ஆனேறும் பெருமானே அரசே என்றன் ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத் தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச் செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன் ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம் உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர் வானேறு கின்றார்நான் ஒருவன் பாவி மண்ணேறி மயக்கேறி வருந்துற் றேனே