ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன் ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய் அம்பலத்தரசே அபயம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்