ஆன்றானை அறிவானை அழிவி லானை அருட்பெருஞ்ஸோ தியினானை அலர்ந்த ஸோதி மூன்றானை இரண்டானை ஒன்றானானை முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில் தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச் சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே