ஆயேன் வேதா கமங்களைநன் கறியேன் சிறியேன் அவலமிகும் பேயேன் எனினும் வலிந்தென்னைப் பெற்ற கருணைப் பெருமானே நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன்நான் காயே எனினும் கனிஆகும் அன்றே நினது கருணைக்கே