ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும் அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும் தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச் சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக் காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே