ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின் அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவே காரணமே காரியமே காரணகா ரியங்கள் கடந்தபெரும் பதியேஎன் கருத்தமர்ந்த நிதியே பூரணமே புண்ணியமே பொதுவிளங்கும் அரசே புத்தமுதே சத்தியமே பொன்னேசெம் பொருளே தோரணமே விளங்குசித்தி புரத்தினும்என் உளத்தும் சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே