ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந் தோரணம் பூத்த எழில்ஒற்றி யூர்மகிழ் சுந்தரிசற் காரணம் பூத்த சிவைபார்ப் பதிநங் கவுரிஎன்னும் வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே
ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் ஆகமம் உரைவரைப் பெல்லாம் காரண நினது திருவருட் செங்கோல் கணிப்பருங் களிப்பிலே ஓங்கி நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமைநான் அறிந்தும் தாரணி யிடைஇத் துன்பமா திகளால் தனையனேன் தளருதல் அழகோ