ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன் அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து வாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும் சீருடைய கண்களும்விட் டகலாதே இன்னும் தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே ஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே