பாடல் எண் :1658
ஆரா அமுதாய் அன்புடையோர்
அகத்துள் இனிக்கும் அற்புதனார்
தீரா வினையும் தீர்த்தருளும்
தெய்வ மருந்தார் சிற்சபையார்
பாரார் புகழும் திருஒற்றிப்
பரமர் தமது தோள் அணையத்
தாரார் இன்னும் என்செய்கேன்
சகியே இனிநான் சகியேனே
பாடல் எண் :1780
ஆரா மகிழ்வு தருமொருபே
ரழக ரிவரூ ரொற்றியதா
நேராய் விருந்துண் டோ வென்றார்
நீர்தான் வேறிங் கிலையென்றேன்
வாரார் முலையாய் வாயமுது
மலர்க்கை யமுது மனையமுது
மேரா யுளவே யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
பாடல் எண் :2048
ஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன்
பேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு
நின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால்
என்போல்வார் என்சொல்லார் ஈங்கு
பாடல் எண் :4065
ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்
சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே
பாடல் எண் :4323
ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
நாரா யணன்விழி நண்ணிய பாதம்
நான்புனை பாடல் நயந்தபொற் பாதம் ஆடிய
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.