ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே காராலும் கனலாலும் காற்றாலும் ககனக் கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ் பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப் படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே