ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங் காட்டார் அரசிலியார் ஊரூர் புகழும் திருஒற்றி யூரார் இன்னும் உற்றிலரே வாரூர் முலைகள் இடைவருத்த மனநொந் தயர்வ தன்றிஇனிச் சீரூர் அணங்கே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே