ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார் பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய் நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே