ஆர்கின்ற தெள்ளமு தின்சுவை என்என் றறைவன்அந்தோ சார்கின்ற சிற்றம் பலப்பெருஞ் சீரினைச் சாற்றுதொறும் சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே நேர்கின்ற தால்என் அருட்பெருஞ் சோதி நிறைந்துளத்தே