ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச் சேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும் பார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ ஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே