ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம் சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும் ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை