ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந் தப்பதி வரையும்அப் பாலும் தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல் செல்லஓர் சிற்சபை இடத்தே சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும் தந்தையே தனிப்பெருந் தலைவா பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே பிள்ளைநான் வருந்துதல் அழகோ