ஆறாத் துயரத் தழுந்துகின் றேனைஇங் கஞ்சல்என்றே கூறாக் குறைஎன் குறையே இனிநின் குறிப்பறியேன் தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ் மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே