ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர் அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர் மாறாமல் மனஞ்சென்ற வழிசென்று திகைப்பீர் வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர் ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே