ஆறாறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும் அறிவிக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த வீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில் விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும் பேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில் பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச் சோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில் சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே