ஆறிட்ட வேணியும் ஆட்டிட்ட பாதமும் அம்மைஒரு கூறிட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலமிக்க நீறிட்ட மேனியும் நான்காணும் நாள்என் னிலைத்தலைமேல் ஏறிட்ட கைகள்கண் டாணவப் பேய்கள் இறங்கிடுமே